''பிச்சாவரத்தில் எம்.ஜி.ஆர்.திட்டு, சின்னவாய்க்கால் பில்லுமேடு,கண்ணகி நகர்,நடுமுடசல்ஓடைன்னு அஞ்சு அருமையான தீவுகள் இருக்கு எம்.ஜி.ஆர்.திட்டில் இருக்கிற முருகன் கோயில் ரொம்ப பிறசித்தி பெற்றது. சின்ன வாய்க்கால் தீவில் சூரிய உதயமும் அஸ்தமனமும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும் . கன்னியாகுமரியை விட அழகுன்னு சொல்லுவாங்க இந்தபக்கம் நாற்ப்பதுக்கும் மேற்ப் பட்ட கிராமங்கலை சுனாமியிலிருந்து காப்பற்றினதே பிச்சாவரம் காடுதான் .இதனால் ,இப்போ கிள்ளைப் பேரூராட்சி சார்பா,ஊர் எல்லையில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு சுராப்புன்னைக் காடு வளர்க்க திட்டம் போட்டு இருக்கிறோம் .சுனாமியில் பாதிக்கப் பட்டஎம்.ஜி.ஆர்.திட்டு,சின்னவாய்க்கால் போன்ற தீவுகளையும் புதுப்பிக்கக் கோரி அரசிடம் கேட்டிருக்கோம் இந்தகாடும் பிச்சாவரமும் எவ்வள்வு முக்கியமுன்னு சுனாமிக்குப் பிறகுதான் தெரிஞ்சுது .இந்த காடுகளில் நிறைய மூலிகைச் செடிகளும் மருத்துவ குணங்கள் கொண்ட மரங்களும் இருக்கு . வெண்குஷ்டம்,ஆஸ்துமா,தோல் சம்மந்தபட்ட வியாதிகளுக்கான மருந்துகள் இருப்பதா கண்டுபுடிச்சு துதொடர்பானாஆராய்ச்சிகளும் நடந்துட்டு இருக்கு'' என்கிறார் கிள்ளை பேரூராட்சியின் தலைவர் ரவிச்சந்திரன். பிச்சாவரம்...இயற்கை தந்த வரம் ! |