killai
vardu
pulliviparam
contact

ki

பச்சை பட்டு விரித்தாற் போல் வயல் நிலங்கள், பவளத் தூண்களை அடுக்கினாற் போல் தென்னை மரங்கள், ஆலுக்கு விழுது போல் அரணாக மூச்சு வேர்களை விழுதுகளாக்கிச் சுவாசிக்கும் ரைசோபோரா இனத்தைச் சேர்ந்த சுரப்புன்னைக் காடுகள், சுரப்புன்னைக் காடுகளை வைரத்திட்டுகளாகப் பதித்த சதுப்பு நிலப் பதக்கம், மீன் வளம் நிறைந்த கடல், மீன்பிடித் தொழில் சிறந்த கடற்கரை, சூரிய உதயத்தையும், சூரிய அத்தமனத்தையும் ஒரே இடத்தில் காணக்கூடிய கன்னியாகுமரிக்கு ஒப்பான கடல் தீவுகள், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 14கி.மீ. தூரத்தில் இருக்கிற சுற்றுலாத் தலம் மூவாயிரம் ஏக்கர் பரப்பளவு சதுப்பு நிலக் காடுகள் தண்ணீருக்குள் விளையாடி வேடிக்கை காட்டுகிற இடம். கடலுக்கும் ஏரிக்குமாக கபடி விளையாடும் தண்ணீரின் நடனம் உலகமெல்லாம் இருந்து இளைப்பாற வரும் பறவைகளின் இன்னிசைக் கச்சேரி, நாரைகளும் அறியாத நான்காயிரம் ஓடைகளின் நிஜ சங்கமம் என படகுப்பயணம் போனால், மனசைப் புல்லாங்குழலாக்கிச் சிரிக்கிறது இயற்கை!

ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை கடல் தண்ணி உள்ளே வரும் அடுத்த ஆறு மணி நேரம் கடல் தண்ணி வெளியே போகும். சுற்றிலும் காடுகள் இருப்பதால், கடலோட எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. படகுத்துறையிலேருந்து ஐந்நூறு அடி தூரம் உள்ளே போயிட்டோம்னா சதுப்பு நிலக் காடுகளுக்குள்ளே போயிடலாம். கடலூருக்கு வடக்கே,பரங்கிப்பேட்டை துவங்கி தெற்கே நாகப்பட்டினம் பழையாறு வரை நெளிந்து வளைந்து நீளூம் காடு. ஆயிரக்கணக்கான கால்வாய்கள் வந்து கலக்கும் காடு என்பதால், யாருக்கும் எல்லா வழிகளும் தெரியாது. அதனால்தான் நாரையும் அறியா நாலாயிரம் ஓடைகள் என்று பெயர் உண்டு.

"இது மாங்ரோவ் (சதுப்பு நில) காடுகள் கொண்ட நீர்நிலைப் பகுதி. இந்தியாவிலேயே இரண்டு இடங்களில்தான் இது உண்டு. ஒன்று, கல்கத்தாவில் கங்கை நதியும் கடலும் கலக்கும் இடம். இரண்டாவது, நம்ம பிச்சாவரம் இந்தக்கடற்கரையின் நீளம் 6கி.மீ. மொத்தம் மூவாயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த நீர்ப்பரப்பில், திட்டுத் திட்டாக கொத்துக்கொத்தகச் சுரபுன்னை மரங்கள் கூடி நிற்பது தனி வசீகரம். சுற்றிலும் மரங்கள் சூழ, நடுவே ஓடை போல தண்ணீர் ஓட, படகுப் பயணம் செல்வது ஆனந்த அனுபவம் சதுப்பு நிலக்காடுகள் இருப்பதால் 170 வகைகளுக்கும் மேற்பட்ட பல அரிய பறவைகள் வந்து செல்கின்றன. வனவிலங்குகள் இல்லாத அருமையான பகுதி இது. வகை வகையான பறவைகலையும் , அபூவமான் மரங்களையும் உள்ளடக்கியது இந்தக் காடு !' பன்றிக்குத்திச்சிறா, உருளிக்கண்டன்,சுரபுன்னை, அடையாத்திக்கண்டன்னு அபூர்வமான பல்வேறு மரங்கள் இங்கே இருக்கின்றன. எல்லாம் மருத்துவக் குணங்கள் கொண்ட மரங்கள். கடல் நீர் ஆற்று நீர் ,மழை நீர் என மூன்று வகையான நீரும் இங்கே சேந்திருப்பதுதான் சிறப்பு. நதியில் வாழும் மீன்கள் கடலில் வாழாது ஆனால் இங்குள்ள மீன்கள் இரண்டு நீரிலும் வாழும் தன்மையுடையவை.

''பிச்சாவரத்தில் எம்.ஜி.ஆர்.திட்டு ,சின்னவாய்க்கால் பில்லுமேடு,கண்ணகி நகர்,நடுமுடசல்ஓடைன்னு அஞ்சு அருமையான தீவுகள் இருக்கு எம்.ஜி.ஆர்.திட்டில் இருக்கிற முருகன் கோயில் ரொம்ப பிரசித்தி பெற்றது. சின்ன வாய்க்கால் தீவில் சூரிய உதயமும் அஸ்தமனமும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும் . கன்னியாகுமரியை விட அழகுன்னு சொல்லுவாங்க இந்தப் பக்கம் நாற்ப்பதுக்கும் மேற்ப் பட்ட கிராமங்களை சுனாமியிலிருந்து காப்பற்றினதே பிச்சாவரம் காடு தான் .இதனால் ,இப்போ கிள்ளைப் பேரூராட்சி சார்பா, ஊர் எல்லையில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு சுராப்புன்னைக் காடு வளர்க்க திட்டம் போட்டு இருக்கிறோம் .சுனாமியில் பாதிக்கப் பட்டஎம்.ஜி.ஆர்.திட்டு, சின்னவாய்க்கால் போன்ற தீவுகளையும் புதுப்பிக்கக் கோரி அரசிடம் கேட்டிருக்கோம் இந்தகாடும் பிச்சாவரமும் எவ்வள்வு முக்கியமுன்னு சுனாமிக்குப் பிறகுதான் தெரிஞ்சுது .இந்த காடுகளில் நிறைய மூலிகைச் செடிகளும் மருத்துவ குணங்கள் கொண்ட மரங்களும் இருக்கு . வெண்குஷ்டம், ஆஸ்துமா, தோல் சம்மந்தபட்ட வியாதிகளுக்கான மருந்துகள் இருப்பதா கண்டுபுடிச்சு அது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடந்துட்டு இருக்கு'' என்கிறார் கிள்ளை பேரூராட்சியின் தலைவர்ரவிச்சந்திரன். பிச்சாவரம்...இயற்கை தந்த வரம் !

 

 

 

 

 

 

 

 

album
homebutton
video

 

Copyright © 2007 Kaniyatamil Software