திட்டப்பணிகள்

சீர்மிகு கிள்ளைப் பேரூராட்சி நிர்வாகத்தை அதன் தலைவர் ரவிச்சந்திரன் வகைப்படுத்திய திட்டங்கள் மூலம் மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்.

      1.  சீர்திருத்தத் திட்டப் பணிகள்

     இதுவரை அமலுக்கு வந்த திட்டங்களின் பயன்கள் முழுமையாகப் பொது மக்களைச் சென்றடையுமாறு நிர்வாகச் சீர்கேடுகளைக் களைந்து நேர்த்தி செய்யும் சீர்திருத்தப் பணிகள் பலவாறு முன்னெடுக்கப்படுகின்றன.

   2. சிறப்பு நலத்திட்டப்பணிகள்

     பல்வேறு வகையான மக்களும் தங்கள் வாழ்வை மேம்படுத்த பல்வேறு சிறப்பு நலத் திட்டப்பணிகள் காலந்தோறும் முன்னெடுக்கப்படுகின்றன.

   3. அடிப்படைக் கட்டமைப்பு திட்டப் பணிகள்

    கிள்ளைக்குத் தேவையான கல்விக்கூடங்கள், பேரூராட்சிக் கட்டிடம், சாலை அமைப்பு போன்ற அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

   4.  புதிய வளர்ச்சித் திட்டங்கள்

    கிள்ளையில் இல்லாத வசதிகளை ஏற்படுத்துமாறு புதிதாக அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களை கிள்ளை பேரூராட்சியில் நிறுவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

   5.  வருவாய் மேம்பாட்டுத் திட்டங்கள்

    தொழில் வளர்ச்சி மற்றம் சுற்றுலா வளர்ச்சி மூலம் கிள்ளை பேரூராட்சியின் வருவாயையும், கிள்ளை மக்களின் வருவாயையும் அதிகரிக்கும் முதலீடுகளை ஊக்குவிக்கும் பணி முன்னெடுக்கப்படுகின்றன.

      சீர்திருத்தத்திட்டப் பணிகள், சிறப்பு நலத் திட்டங்கள் ஆகியன நேரடியாக மக்கள் நலன் பேணுவதற்கும், அடிப்படைக் கட்டமைப்பு திட்டப் பணிகள், புதிய வளர்ச்சித் திட்டங்கள் ஆகியன கிள்ளை பிரதேச மேம்பாட்டிற்கும், வருவாய் மேம்பாட்டுத் திட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் எனத் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன.

 

album
homebutton
video

 

Copyright © 2007 Kaniyatamil Software