சீர்திருத்தத் திட்டப்பணிகள்

 

    1.  ஆண்டுக் கூட்டம்

      ஆசிரியர், சத்துணவு ஊழியர், கிராம நிர்வாகிகள் ஆகியோருக்கு தனித்தனியாக விருந்துடன் கூடிய கூட்டம் நடத்தப்பட்டது.  இக்கூட்டத்தில் அவரவர் பணிகளைச் சிறப்பாகச் செய்வது எப்படி என்பது பற்றியும், சிறப்பாகப் பணியாற்றுவதற்குத் தடையாக உள்ள காரணிகளை விலக்குவது எப்படி என்பது பற்றியும் கருத்துகள் பரிமாறப்பட்டன. 

      சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், சிறப்புறப் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டும், பரிசும் ஆண்டுதோறும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  இக்கூட்டத்தில், தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்குவதற்காக ரூபாய்.10,000/-ஐ தனது சொந்தப் பணத்திலிருந்து, பேரூராட்சித் தலைவர் கிள்ளை ரவிச்சந்திரன் வைப்பு நிதியாக வழங்கியுள்ளார். 

    2.  குடிநீர் கண்காணிப்புக் குழு

     குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்கு எனத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு 20 நாள் இடைவெளியிலும் குடிநீர் தொட்டிகள் சுத்திகரிக்கப்பட்டு, குளோரின் இடப்பட்டு சுகாதாரமாகப் பேணப்படுவதை இக்குழு கண்காணித்து வருகிறது. 

    3. ரேஷன்கடை கண்காணிப்பு

     கிள்ளை பேரூராட்சியில் உள்ள ரேஷன் கடைகளில் ஒழுங்கான முறையில் ரேஷன் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    4. பண்டிகைப் பரிசு

     பண்டிகைக் காலங்களில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

    5. சத்துணவு முறைகேடு நிவர்த்தி

     இருளர் பழங்குடியைச் சேர்ந்த 126 மாணவர்களுக்கு கலைஞர் நகரில் இரண்டு வருடங்களாக சத்துணவே வழங்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டு ஒழுங்கான முறையில் அவர்களுக்கு சத்துணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    6.  நகராட்சிப் பணியாளர் சீருடை

     பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

 

album
homebutton
video

 

Copyright © 2007 Kaniyatamil Software