அடிப்படை கட்டமைப்பு திட்டப் பணிகள் |
1. புதிய நகராட்சி கட்டிடம்
பேரூராட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு 21 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
2. சாலை புனரமைப்பு
20 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி மறைக்கப்பட்ட சாலைகள் மீண்டும் கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க தெரு " சாமி பாட்டை" ஆகும்.
3. பள்ளிகளுக்கு குடிநீர்க் குழாய்
கிள்ளை பேரூராட்சியில் உள்ள 15க்கு மேற்பட்ட பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக குடிநீர் குழாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
4. மயான வசதி
மயானமே இல்லாத MGR திட்டு மக்களுக்காக, ஒரு மயானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
5. சாலை வசதி
MGR திட்டுக்கு செல்வதற்கு 2 கிலோ மீட்டர் வரை சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உச்சிப்பாளையம் சாலைப்பணி 13 இலட்சத்து 70 ஆயிரத்திற்கு நடைபெறுகிறது.
6. கால்வாய்களை ஆழப்படுத்தல்
MGR திட்டு, சின்ன வாய்க்கால் பகுதிகளில் மீன் பிடிக்க வசதியாக ஆறுகளை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
7. புதிய சாலை அமைப்பு
20 வருடங்களாக இல்லாத மஸ்தான் தெரு, பட்டா நிலத்தை விலைக்கு வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது.
8. உயர் கோபுர மின் விளக்கு
கடை வீதி இரவு நேரங்களில் பிரகாசமாக இருப்பதற்காக ரூபாய் 2 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட உள்ளது.
9. வீதிகளுக்குப் பெயரிடும் மரபு
வீதிகளுக்கு தலைவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற உயர் மரபு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
10. சாலையோரப் பூங்கா
11. உடற்பயிற்சி கூடம்
12. கால்நடை மருத்துவமனை
13. ஆரம்ப சுகாதார நிலையம்
14. ஒரு லட்சம் மரம் நாட்டும் திட்டம்
15. குப்பைகளை மீள்பயனாக்கும் திட்டம்
16. பேருந்து நிலையம் அமைத்தல்
17. மீன் அங்காடி கட்டுதல்
18. கிள்ளை செய்திமடல் வெளியிடல்
|